Fri. Dec 20th, 2024

கோவை மாவட்டத்தில் கோயில்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது…

சூலூர் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக கோயிலில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சாமி சிலைகள், நகைகள் மற்றும் சில்லரை காசுகளை கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடங்களில் சென்று பார்வையிட்டும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டு பிடித்து களவாடப்பட்ட பொருட்களை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டி DSP பாஸ்கர் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு
வழக்கு சம்மந்தமாக விசாரணை நடத்தி குற்றவாளி களை தேடிவந்தனர் இந்நிலையில் தனிப்படையினர் வெவ்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் சந்தேகம் படும் படி
ஒரு வாகனத்தில்
வந்த வானப்பன்
52 / த/பெ,பழனிச்சாமி என்பவனை பிடித்து விசாரணை செய்ய அவன் முன்னுக்கு
பின் முரனாக பதில் கூறியதால் அவனை நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி அவனது கையில் இருந்த பையை சோதனை செய்ய அதில் ஏராளமான சில்லறை காசுகள் இருந்ததை பற்றி கேட்க சரியான காரணம் கூறாததால் அவனிடம் நடத்திய விசாரணைக்கு பின் தானாகவே முன் வந்து தனது கூட்டாளிகள் 3 பேருடன் இனைந்து சூலூர் சுற்று வட்டார பகுதியில் இருக்கும் கோயில்களை நோட்டமிட்டு இரவு நேரத்தில் கோயில்களில் சென்று கொள்ளையடித்ததாக கூறினான் அவன் சொன்ன தகவல்களை வைத்து தலைமறைவாக இருந்த 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 5,31000 ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மற்றும் பொருட்களை
கைப்பற்றியது
தனிப்படையினர் காவல் துறையினர்…