Mon. Jul 8th, 2024

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு! உரிமையாளரும் பலி..!

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தை அடுத்த குருவி மலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட் டோர் வேலைபார்த்து வருகிறார்கள். இங்குள்ள குடோனில் இன்று மதியம் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தின் போது குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. குடோன் முழுவதும் பற்றி எரிந்தது.


இதில் அங்கிருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

ஆலையில் நடந்த வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீட்டர் அளவுக்கு உணரப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து நிகழ்ந்தபோதே 5 பேர் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.

பட்டாசு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை இந்த விபத்தில் மொத்தம் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும், விபத்தில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சுதர்சனும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உள்பட 16 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்…

முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் 2 பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டாசு குடோன் வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, பசுமை பட்டாசு உற்பத்தி குறித்த யுக்திகளை அனைத்து பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கும் பயிற்சி அளிக்காதது, சீன பட்டாசுகளின் சட்டவிரோத இறக்குமதியை தடுக்க இயலாமை போன்றவற்றால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரமே போராட்டமாக இருக்கும் நிலையில் இப்படி இயங்கக் கூடிய தொழிற்சாலைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யாமல் இருப்பதுதான் இது போன்ற விபத்துகள் தொடர்கதையாகி வருவதற்கு காரணம். இதை சரி செய்து அப்பாவி தொழிலாளர்களின் உயிர் பலியை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாகவும் உள்ளது.