வாணியம்பாடி அருகே வீடு கட்ட விவசாயிடம் ரூ 9 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்…
வாணியம்பாடி.டிச.19. வாணியம்பாடி அருகே நிலத்தில் வீடு கட்ட நிலத்தை அளவை அளவீடு செய்து தர விவசாயிடம் 9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்த அம்மூர் கல்புதூரைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் அசோகன் (33). இவர், வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஆலங்காயம் குறுவட்டத்துக்கான சர்வேயராக (நில அளவையர்) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் கோபாலகிருஷ்ணன் (31) தான் வீடுகட்ட போவதாகவும் ஆகவே தன்னுடைய நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி, சர்வேயர் அசோகனை அணுகினார் சர்வேயர், ‘ரூ.9,000 கொடு. அப்போதுதான் நிலத்தை அளக்க வருவேன்’ என்று கூறியுள்ளார் லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன், இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் அளித்தார் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய
ரூ.9,000 பணத்தை எடுத்துக்கொண்டு வாணியம்பாடி- ஆலங்காயம் பைபாஸ் சாலையோரம் நியுடவுன் பகுதியில் உள்ள தாஜ் விடுதிக்கு கோபலகிருஷ்ணனை வரவழைத்து அங்கு அந்த பணத்தைபெற்ற போது மறைந்து இருந்த வேலூர்லஞ்ச ஒழிப்புத் காவல்துறை துறைஆய்வாளர்கள் விஜய் மற்றும் விஜயலட்சுமி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார்
நில அளவையர் அசோகனை பணத்தை பெற்ற போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.. கைரேகை பதிந்த நோட்டுகளை உடனடியாக கைப்பற்றி சர்வேயரை கைது செய்தனர். அவரிடம், போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்…
வாணியம்பாடி தமிழரசன்