Sun. Oct 6th, 2024

பிப்ரவரி 25 ஆம் தேதி வரை கரன்சியோடு சுத்தாதீங்க ! |

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19- ம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியானதில் இருந்து வேட்பாளர்கள் தேர்வுப் பட்டியலை கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்தந்தப் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
காவல்துறையினர், வருவாய்த் துறையினர், மாநகராட்சி சிறப்புப் படையினர், தேர்தல் கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் தேர்தல் பகுதிகளில் தீயாய் வேலை பார்த்து வருகிறார்கள்…

திருமணம் போன்ற நல்ல காரியங்களுக்கு நகை வாங்கப் போகிறவர்கள், சொத்துகளை விற்பவர்கள், வாங்குகிறவர்கள் மொத்தக் கரன்சியோடுதான் போவீர்கள்- வருவீர்கள், அது நல்லதல்ல.
நீங்கள் கொண்டு போகும், கொண்டு வரும் ரொக்கப் பணத்துக்கு முறையான ஆவணத்தைக் கையில் வைத்திருந்தால், சோதனை அதிகாரிகளிடம் அவற்றைக் காட்டிவிட்டு ரொக்கத்தோடு வீட்டுக்குப் போகலாம் !
அந்த நேரத்தில் ஆவணம் ஏதும் கைவசம் இல்லையென்றால், ஆவணத்தைக் கொடுக்கும் வரை அது அரசாங்க கஜானாவில் வைக்கப்படும்.
தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்க்க, புத்திசாலித்தனமாக செயல்படுவதுதான் தேர்தல் நடத்தை விதிமுறை அமுல் காலங்களில் நல்லது !
முக்கியக் குறிப்பு :
வேட்புமனுத்தாக்கல் : 28.1.2022
வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள் : 04.2.2022

வேட்பு மனு பரிசீலனை : 05.02.2022.
வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாள் : 07.2.2022
வாக்குப்பதிவு : 19.02.22
தேர்தல் முடிவுகள் 22.02.22- அன்று வெளியாகும்.
மார்ச் 4-ஆம் தேதி, மேயர் (ம) மாநகர் மன்ற, நகர்மன்றத் தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் : தேர்தல் ஆணையம்.