ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து | 33 சவரன் தங்க நகை, 2 லட்சம் பணம் கொள்ளை |

33 சவரன் தங்க நகை, 2 லட்சம் பணம் கொள்ளை.
சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், சித்ரா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சுசிலா குமார்(62), கணவரை இழந்து தனியாக வசித்து வந்த நிலையில், அவரது மகளின் மாமியார் இறந்து விட்ட காரணத்தால், 24ம் தேதி, காலை வீட்டை பூட்டிவிட்டு வந்தவாசிக்கு சென்றிருந்தார்.

இன்று 12 மணியளவில் பக்கத்து வீட்டினர், வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்துவிட்டு பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்று பார்த்தனர்.

வீட்டிலிருந்த சுமார் 33 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்கையடிக்கப்பட்டிருப்பதாக ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் தெரிவித்துள்ளார்.

போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அதே போல் புது பெருங்களத்தூர், கண்ணகி தெரு, சீனிவாசன் நகரில் ஆராவமுதன் (50), என்பவரது வீட்டின் கீழ் தளத்தை பூட்டிவிட்டு, மேல் தளத்தில் தங்கியிருந்த போது பூட்டை உடைத்து லேப்டாப் மற்றும் 3000 ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது. இந்த புகாரையும் விசாரித்து வருகின்றனர்.