Thu. Dec 19th, 2024

பணியில் இருந்த காவலரை மிரட்டியது | அமைச்சரின் டிரைவரா? |

தலைமைச் செயலகத்தில் பணியிலுள்ள காவலர் ஒருவரை மிரட்டியது அமைச்சரின் ஓட்டுநர் என்றதும் அடங்கிப்போன காவலர்கள்|

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெளியில் செல்லும் வாயிலில் (Out Gate) FRISKING POINT – SCP “B” TEAM பாதுகாப்பு பணியில் முதல் நிலை காவலர் செல்வம் (44304) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக மாண்புமிகு அமைச்சரின் ஓட்டுநர் பெயர் மதன், என்றும் தலைமைச் செயலகம் என்பதால் பாதுகாப்பு காரணத்திற்காக காவலர் சோதனை செய்துள்ளார்.

அதற்கு நான் யார் தெரியுமா? என்னையே சோதனை செய்வீயா? என்று காவலரிடம் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி போடா, வாடா என ஒருமையில் பேசியது நீ இனிமேல் இங்கு நிக்கவே மாட்ட என ஒருமையில் பேசி மிரட்டி விட்டு செல்லும் காட்சியை அருகில் இருந்த சக காவலர்கள் சிலர் பதிவு செய்துள்ளனர்.

சாதாரண ஒருவர் அமைச்சரின் ஓட்டுநர் என்பதால் அவரது பெயரைக் கூறிக்கொண்டு பணியிலுள்ள காவலர் ஒருவரை மாண்புமிகு முதல்வரின் அலுவலகமான தலைமைச் செயலகத்திலேயே மிரட்டுகிறார் என்றால் வெளியில் சொல்லவா வேண்டும்…

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்த சம்பவம் முதல்வரின் கவனத்திற்கு நிச்சயம் போகும் என்றும் நிச்சயம் அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் தலைமைச் செயலகத்தில் பணியில் உள்ள காவலர்கள் மத்தியில் பேசப்படுகிறது.