Sun. Oct 6th, 2024

மகிழ்ச்சியில் திளைத்த மீனவ மக்கள் | ஸ்ரீ அதிபத்த நாயனார் நகர் | என பெயர் அமைத்த தருமை ஆதீனம் |

நாகை மாவட்டமாக திகழ்ந்து தற்போது புதிதாக உருவாகியுள்ள மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள திருமுல்லைவாயில் பகுதிக்கு உட்பட்டு, சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்திற்கு தருமை ஆதீனம் சார்பில் அப்போது தமிழக அரசுக்கு சுமார் 45- ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டு, அதில் சுனாமி குடியிருப்பு கட்டப்பட்டும் அந்த இடம் இன்று வரையிலும், சுனாமி நகர் என்ற சுனாமி நினைவை நாளும் சுமந்தபடி இருந்த அப்பகுதி மக்கள் தங்களது துயரை மறந்து அவர்களும் பெருமை அடைய வேண்டும் என்று எண்ணிய தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம்..

திருமுல்லைவாயில் மீனவர்கள் குப்பம் சுனாமி நகர் என்று இருந்ததை, மாற்றம் செய்தால் இங்குள்ள மீனவ மக்கள் அனைவரின் வாழ்வும் வளம்பெறும் என கூறிய தருமை ஆதீன குருமணிகளின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிக்கு ஸ்ரீ அதிபத்த நாயனார் நகர் என பெயரை அமைத்து அதற்கான பெயர் பலகையை தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருக்கரங்களால் இன்று திறந்து வைத்தும் மீனவ இளைஞர்களின் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை துவக்கி வைத்து.

மீனவ சமுதாய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நகர் பலகையை தருமை ஆதீனம் 27வது நட்சத்திர குருமணிகள் திறந்து வைத்ததை அடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் நன்றிகளை கூறி சுவாமிகளிடம் ஆசிப்பெற்றனர். அப்பகுதியில் உள்ள மீீீனவ மக்கள் சந்நிதானத்தின் மீது வைத்துள்ள அளவுகடந்த அன்பை ஏற்ற குருமகா சந்நிதானம் அனைவருக்கும் ஆசிநல்கி உரை நிகழ்த்தினார்…