Thu. Dec 19th, 2024

போலீஸ் கமிஷனர் அதிரடி..! | கிலியில் உள்ள சில அதிகாரிகள்.? |

சென்னையின் ஒரு சில பகுதிகளில் சமீப காலமாக சூதாட்டம், ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சா விற்பனை, போதை மாத்திரை, உட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் Poker Club போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் சட்ட விரோதமாக புழக்கத்தில் உள்ளது. இளைஞர்கள் பலரது எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிடும் என்பதாலும் சமூக அக்கறையை மட்டும் கருத்தில் கொண்டு எங்கள் பேராண்மை செய்தி நிறுவனத்தில் உள்ள (Journalism) இதழியல் பட்டப் படிப்பை முடித்த இளம் செய்தியாளர்களை கொண்டு சென்னையின் சில இடங்களில் சட்ட விரோதமாக நடைபெறும் சூதாட்டம், ஒரு நம்பர் லாட்டரி, கேரள லாட்டரி உட்பட சென்னை நகரில் நள்ளிரவு வரை அத்துமீறி இயங்கி வரும் தனியார் மதுபான பார்கள், மேலும் நட்சத்திர ஓட்டல்களில் தனியறையில் உட்கா புகைப்பது, Poker Club, பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வரும் சில இடங்களில் எங்கள் செய்தியாளர்கள் உயிரை பணயம் வைத்து செய்தியை சேகரித்து அதை புகாராகவும், பின்பு செய்தியாகவும் தொடர்ந்து வெளியிட்டு, இதை காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நேர்மையான அதிகாரிகளின் சீரிய நடவடிக்கையின் பேரில் தொடர்ந்து தீர்வும் கண்டு வருகிறோம்.

இந்நிலையில் கிண்டி, வடபழனி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, பெருங்களத்தூர், பழைய பல்லாவரம், பள்ளிகரணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்து சில நிகழ்வுகளை வீடியோ பதிவுகளாக பதிவு செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் கவனத்திற்கு புகாராகவும், பேராண்மை இணைய தளத்தின் வாயிலாக செய்தியும் வெளியிட்டு வருகிறோம்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ்,. அவர்கள் சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கையாக சம்பவம் நடைபெறும் பகுதிக்கு அப்பாற்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், தலைமையில் தனிப்படை அமைத்து சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் அருகேயுள்ள நாகேஸ்வரா ரோட்டில் உள்ள (U×× Ap×××××××) என்ற அடிக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 2- ஆண்கள் 1 பெண் தலைமையில் பல மாதங்களாக பணம் வைத்து சூதாட்டம் POCKER GAME நடைபெறுவதை கண்காணித்த தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட ரெட்டேரியை சேர்ந்த கோவர்த்தனன் (44), தி.நகரை சேர்ந்த அஸ்வின்குமார்(34), உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்தும் அவர்களிடம் இருந்த 48,021 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பேராண்மை செய்தி நிறுவனத்தின் சார்பில் வெளியிட்ட செய்தியின் எதிரொலியின் காரணமாகவே இங்கு சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என நிச்சயம் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு எங்களின் புலனாய்வு நிருபர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் உட்பட யாரும் அனுபவம் இல்லாத பத்திரிகையாளர்கள் இல்லை என்பதையும், ஆனால், உண்மை, நேர்மை, தேச பக்தி கொண்டவர்கள் என்ற பெருமிதம் உள்ளது. சென்னையில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் சட்டத்திற்கு புறம்பான தகவல்கள் தனது கவனத்திற்கு வந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வரும் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் பேராண்மை செய்தி நிறுவனம் காவல் துறைக்கும், காவல் அதிகாரிகளுக்கும் எதிரானது கிடையாது என்பதை இந்த செய்தியின் வாயிலாக ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஒருவர் மீதும் செய்திகளை வெளியிடுவதில்லை அவர்களின் மதம் சார்ந்தும், ஜாதி சார்ந்தும், கூடுமானவரை தனிமனித அந்தரங்க செய்திகளை வெளியிட்டதில்லை இனியும் வெளியிட மாட்டோம்.

கடந்த மூன்று தலைமுறைகளாக பத்திரிகை துறையில் இயங்கி வரும் குடும்பத்திலிருந்து வந்தவன் என்ற முறையில் பத்திரிகை தர்மத்தை கடைப் பிடித்தும் பொய் வழக்குகளை சந்திக்க நேரும் பட்சத்தில் ( பிரஸ் கவுன்சில் ) மூலம் அதற்கு தீர்வு காண்போம்.

காவல் ஆணையருடன் பத்திரிகையாளர் விமலேஷ்வரன்

குறிப்பு: சென்னை மாநகர காவல் ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., பொறுப்பு ஏற்ற பிறகு சென்னையில் சட்டம் – ஒழுங்கு அமைதியாக இருந்து வருவது பாராட்டுக்குறியது. மேலும் அவரது அதிரடி நடவடிக்கையின் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பாராட்டும். ஒரு படி மேலே கூற வேண்டுமானால் மூத்த பத்திரிகையாளர்கள் மத்தியில் உயர்வாக பேசப்பட்டு வருகின்றார்…

ச.விமலேஷ்வரன்

நற்றுணையாவது
நமச்சிவாயவே