பல்லாவரம் காவல் நிலையத்தில் | ஏழுமலை மரணத்தின் மர்மம் |
சென்னை பழைய பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்தவர் ஏழுமலை (62) இவரது மகன் நித்தியானந்தம், கடந்த 1ம் தேதி அப்பகுதியில் பூமிக்கு அடியில் கேபிள் பதிக்கும் பணியை பல்லாவரம் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஹரிஹரன் (38) என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது நித்தியானந்தம் மற்றும் இளநிலை பொறியாளர் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறில் பொறியாளரை தாக்கியதாக பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் நித்தியானந்தம் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரது தந்தை ஏழுமலையை பல்லாவரம் போலீசார் தினந்தோறும் காவல் நிலையம் அழைத்து விசாரித்து வந்தனர். CSR மட்டும் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இன்று வழக்கம் போல் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான ஏழுமலை விசாரணையின் போதே காவல் நிலையத்தில் வாந்தி எடுத்தார். சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
பல்லாவரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக உள்ள திரு.இளங்கோவன் அவர்களை பற்றி நாம் செய்தி வெளியிட விரும்பவில்லை இவரை போன்றவர்களை இறைவன் தான் சரிபார்க்க வேண்டும்.
காவல் நிலையம் ஆஜரான நபர் உயிரிழந்த மர்மம் என்ன? என்றும் வழக்கமான முறையில் ஆய்வாளர் இளங்கோவன் காப்பாற்றப்படுவார் எனவும் காவல்துறை அதிகாரிகளிடம் தரப்பில் கூறப்படுகிறது…