Thu. Dec 19th, 2024

FACEBOOK – ல் கிளிகள் விற்பனை 5 பேர் கைது | 53 கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறை |

சென்னை கிண்டியில் உள்ள வனச்சரக அலுவலகம், தலைமையிட சரகம் (வன உயிரினம்) வனத்துறை ஆய்வாளர் கிளெமெண்ட் எடிசன் என்பவருக்கு கிடைத்த தகவலின் பேரிலும், சமூக வலைதளத்தில் கிளிகள் விற்பனை செய்வது தொடர்பாக  விளம்பரம் வந்ததால் கிளிகள் வாங்குவது போல் தொடர்பு கொண்ட வனத்துறையினர். அவர்களை நெருங்கிய போது அவர்களிடம் இந்திய பெருங் கிளிகள், மலை கிளிகள், விற்பனைக்கு உள்ளது தெரியவர சாந்தோமில் இருந்து முத்து செல்வன் (20) மற்றும் பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த ஜெகன் (31) ஆகியோரை கைது செய்தபோது அவர்களிடம் இருந்து 11 கிளிகளை கைப்பற்றினர்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இராயபுரத்தை சேர்ந்த மருத்துவர் முகமது ரமளி (55), என்பவரை கைது செய்து 40 கிளிகள் பறிமுதல் செய்தனர்.

அதே போல் தண்டையார்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் (27), பாரிமுனையை சேர்ந்த கார்த்தி (35) ஆகியோரை கைது செய்து இரண்டு கிளிகளை பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 53 கிளிகள் பறிமுதல் செய்தும் மேலும் 5 பேரையும் கைது செய்த வனத்துறையினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிளிகளை மலை பிரதேசங்களில் இருந்து குஞ்சுகளாக எடுத்து வந்து சமூக வலைதளத்தில் ஜோடி 3600 ரூபாய்க்கு விற்று வந்ததை ஒப்புக் கொண்டனர்.

வன உயிரின் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாதுகாக்கப்பட வேண்டிய கிளிகள் விற்பனை செய்வதும் வளர்ப்பதும் சட்டப்படி குற்றம், பறிமுதல் செய்யப்பட்ட கிளிகள் பட்டியல் 4ல் இடம்பெறும், இதற்கு சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் கிடைக்க வாய்ப்புள்ளதாக வனச்சரக ஆய்வாளர் தெரிவித்தார்…