Mon. Jul 8th, 2024

வடபழனி காவல் நிலையம் அருகே | கலாச்சார மையம் என்ற பெயரில் மங்காத்தா! |

சென்னை வடபழனி, எண்; 213 பழைய எண் 115, ஆற்காடு சாலை வடபழனி சரவண பவன் ஓட்டல் எதிரில் இயங்கி வரும் ஜான்சன் கல்ச்சுரல் சென்டர் ( JOHNSON CULTURAL CENTRE ) 82/1990 என்ற பதிவு எண்ணில் இயங்கி வரும் ALL INDOOR & OUTDOOR GAMES என பெயர் பலகை வைத்து CHESS, TABLE TENNIS, GYM, CARROM, LIBRARY, போன்ற விளையாட்டுகள் எதையும் நடத்தாமல் இந்த விளையாட்டிற்கு உண்டான பொருட்களை வைத்துக் கொண்டு சீட்டாட்ட கிளப் தான் காலை முதல் இரவு வரை பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறது.

சட்டவிரோதமாக சூதாட்ட கிளப் நடத்தி வருபவர்களை பற்றிய விவரத்தை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பது போல சில நாட்கள் மட்டுமே கண்துடைப்புக்கு மூடி வைத்திருந்ததாக தெரிகிறது…

முக்கிய சாலையான ஆற்காடு சாலை வடபழனி முருகன் கோயில் அருகே உள்ள வளைவுக்கு எதிரில் இந்த கிளப் இயங்குவது அங்குள்ள பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்த நிலையில் 500 அடி தொலைவில் உள்ள வடபழனி காவல் நிலைய அதிகாரிகளும், காவல் ஆளிநர்கள், உட்பட உளவுத்துறை காவலர்களுக்கு கூட தெரியாது என்று கூறினால் யாரும் ஏற்றுக் கொள்வதாக இல்லை என்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் நமது செய்தி நிறுவனத்திற்கு தொடர்ந்து வீடியோக்கள் எடுத்து அனுப்பி வைத்த நிலையில் அந்த வீடியோக்களை புகைப்படங்களாக அச்சிட்டு அப்பகுதி பொதுமக்களிடம் பெற்ற பத்திரிகை செய்திகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும், தமிழக உளவுத்துறை உயர் அதிகாரி உட்பட காவல் ஆணையருக்கும் புகாராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூதாட்ட கிளப் இங்கு இயங்கி வருவதற்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள், மற்றும் சட்டவிரோதமாக சூதாட்ட கிளப்பை நடத்தி வரும் நபரையும், அதற்கு துணை போன வடபழனி காவல் துறையினர் மீதும் உடனடி நடவடிக்கை எடுப்பாரா..? பெருநகர காவல் ஆணையர் என காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரும் இந்த சூதாட்ட கிளப்பின் பங்குதாரர் என்ற தகவலையும் நம்மிடம் தற்போது தெரிவிக்கிறார்கள் இப்பகுதி வியாபாரிகள்…

சமீபத்தில் சென்னையில் நடந்த சூதாட்ட கிளப் ரெய்டில் உதவி ஆய்வாளர் ஒருவர் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது…

இச்செய்தி சம்மந்தமாக அனைத்து ஆதாரங்களையும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பேராண்மை செய்தி நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் குழு புகாராக அனுப்பி வைத்துள்ளனர்.