Sun. Oct 6th, 2024

பாமர பிள்ளைகள் படிக்கும் பாடப் புத்தகங்களை | பழைய இரும்பு கடையில் விற்றவர்கள் யார்? |

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் 28-12-2020 இன்று தான் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டம் துவங்கிய முதல் நாளிலேயே மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலையில் இயங்கி வரும் பழைய இரும்பு கடை ஒன்றில் நடப்பு கல்வி ஆண்டிற்கான (2019-2020) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 5000 ஆயிரம் பாடப்புத்தகங்கள் 5 டன்னுக்கும் மேலாக குவியல் குவியலாக, பழைய இரும்பு கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செயலில் கல்வித் துறையை சார்ந்த சிலர் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகத்தை கொரோனா காலத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு வழங்காமல் பணத்திற்காக, பழைய இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளனர்.

இது குறித்து தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் பாடப் புத்தகத்தை விற்பனை செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் நாகை மாவட்ட குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.