Sun. Oct 6th, 2024

சதுரங்க வேட்டை மோசடியில் தினகரன் ஜெகன்?| தலைவி என மிரட்டல் விடும் வள்ளி | ஊருக்கு தான் உபதேசம் தமிழருவி மணியன் |

சதுரங்க வேட்டை பட பாணியில் தினகரன் நாளிதழின் புகைப்படக்காரர் ஜெகன் மற்றும் காந்திய மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி தலைவி குன்னூர் வள்ளி ரமேஷ் இருவரும் பாத்திர வியாபாரி ராமரை முதலில் நம்பவைத்து பிறகு மோசடி செய்ய திட்டமிட்டு சந்தேகம் வராத வகையில் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். தினகரன் நாளிதழ் ஜெகனின் தொடர் வற்புறுத்தலால் வேறு வழியின்றி குழப்பத்தில் இருந்த ராமரிடம் ஜெகன் தொடர்ந்து போனிலும் நேரிலும் தொடர்புக் கொண்டு எதற்கும் பயப்பட வேண்டாம், நான் தினகரன் நாளிதழில் பணி புரிந்து வருகிறேன்..

குன்னூர் வள்ளி ரமேஷ், காந்திய மக்கள் இயக்கத்தில் முக்கிய பதவியில் உள்ளார். மேலும் அந்த இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனின் நம்பிக்கைக்குரிய நபர் என்றும், தங்களுக்கு திருமணம் நடந்து கடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லை ஆகையால், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவசர அறுவை சிகிச்சைக்கு நீங்கள் பணம் தந்து உதவ வேண்டும் என்று தெரிவித்த ஜெகன், தாங்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் வருகிறது என்றும் நீங்கள் பணம் கொடுத்த பிறகு நான்கே நாட்களில் 2 லட்சம் ரூபாய் பணம் அதிகமாக தங்களுக்கு கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை ஜெகன் கூறியுள்ளார்..

இந்நிலையில் ராமரும் ஒரு குழந்தையை இவர்களின் ஆசிரமத்தில் முறைப்படி தத்தெடுக்கலாம் என்ற நம்பிக்கையில் ஜெகனின் வாய்ஜால மோசடி வார்த்தையை நம்பி பணம் தர ஒப்புக் கொண்ட பிறகு தான் வள்ளி ரமேஷ், ராமரை சந்திக்க வடபழனி பஸ் நிலையம் அருகேயுள்ள வசந்த பவன் ஓட்டலுக்கு வர வைத்தார் தினகரன் நாளிதழ் ஜெகன்…

அப்போது வள்ளி ரமேஷ் மற்றும் ஜெகன் ஆகியோருடன் மேலும் மூவர் வருகின்றனர். பின்பு வள்ளியின் கணவர் ரமேஷ் என்பதாக ராமரிடம் தெரிவிக்கின்றனர். ராமரை சந்தித்த பிறகு ஜெகனும் வள்ளியும் பணத்தை கையில் வாங்காமல் அவர்கள் வேறு ஒரு வங்கி கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என கூறி வங்கி கணக்கு விவரங்களை கொடுத்து இரண்டே நாட்களில் 10 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தவே வீடு கட்டுவதற்காக வங்கியில் வாங்கிய லோன் தொகை ரூ. 30 லட்சத்தில் கடன்கள் போக மீதமுள்ள 10 லட்சம் ரூபாயை இவர்கள் தந்த வங்கி கணக்கிற்கு RTGS மூலம் செலுத்துகிறார் அப்பாவி ராமர்.

சதுரங்க வேட்டை பட பாணியில் ராமரை ஏமாற்றிய பிறகு பணத்தை திரும்ப கேட்டவுடன் மிரட்டல் விடுத்த ஜெகனும், குன்னூர் வள்ளி ஆகிய இருவரும் தப்பித்தது எப்படி?…

மகளிர் அணி தலைவி குன்னூர் வள்ளியிடம் ஏமாந்த ராமரின் வழக்கறிஞரிடம் ஊருக்கு உபதேசம் செய்யும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியது என்ன?

ஜெகனின் மிரட்டலும்,
வள்ளியின் ஆட்டமும். ( தொடரும்… )