அதிபத்தர் நாயனார் ஐதீக நிகழ்ச்சி | படகில் சென்று தருமை ஆதீனம் அருளாசி |
சீர்காழி அடுத்த ஸ்ரீமுல்லைவனநாதர் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட தருமை ஆதீன கட்டளைமடம் கும்பாபிஷேகம், வணிகவளாகம் திறப்பு விழா நடைபெற்றது.
திருமுல்லைவாசலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அணி கொண்ட கோதையம்மன் சமேத ஸ்ரீ முல்லைவனநாதர் கோவில் உள்ளது இக்கோவில் புதிதாக கட்டப்பட்ட கொடிமரம் மண்டபம், கட்டளைமடம் ஆகியவற்றுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து வணிக வளாகம் திறப்பு விழாவும் நடைபெற்றது. திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றார். முன்னதாக சுவாமி – அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, அலங்காரம், மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் தருமபுரம் ஆதீனம் திருமுல்லைவாசல் மீனவ மக்களுடன் படகில் சென்று சொக்கநாதர் மீனவராகி வலைவீசிய படலம், அதிபத்தர் ஐதீக வரலாறு, திருஞான சம்பந்தர் பதிகம் பாடுதல் நிகழ்வுகளில் பங்கேற்று மீனவ மக்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் மீனவ கிராம மக்களுக்கு சுனாமியின் போது தருமை ஆதீனம் இடம் கொடுத்து கட்டிய காலணிக்கு அதிபத்த நாயனார் பெயரை வைக்க ஆலோசனை கூறி ஆசி வழங்கிய போது உடன் தருமபுர ஆதீன மடத்து நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
- நிருபர் வெ.ராம்