ஜனநேசன் இதழ் ஆசிரியர் இல்ல வரவேற்பு நிகழ்ச்சி | முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து |
ஜனநேசன் ஆசிரியர் ARV அவர்களின் பேரனும் ஜனநேசன் முதன்மை செய்தி ஆசிரியரும் எங்கள்
செல்வன் K.விஜு வெங்கட்ராம் & செல்வி A.பத்மா ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள GRK மஹாலில் இன்று சிறப்பாக நடைபெற்றது…
இதில் சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவர் மூத்த பத்திரிகையாளர் ஆசான் வி.அன்பழகன், இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க இணைச் செயலாளர் ஸ்பைடர் சீனிவாசன், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் DSR.சுபாஷ், பேராண்மை செய்தி நிறுவனத்தின் சார்பில் பத்திரிகையாளர் ச.விமலேஷ்வரன், சிவசேனா கட்சியின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், பாரத் இந்து முன்னணி மாநிலத் தலைவர் ஆர்.டி.பிரபு ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்…
வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் கட்சியை சார்ந்த பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள் உட்பட ஏராளமானவர்கள் நேரில் வந்து மணமக்கள் இருவரையும் வாழ்த்தினர். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் அனைவருக்கும் தூய்மை பாரத இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஜனநேசன் இதழின் ஆசிரியருமான மூத்த பத்திரிகையாளர் வி.எஸ்.ராமன் நன்றி தெரிவித்தார்…