மயானபூமி ஒப்பந்ததாரரிடம் பிணத்துக்கு லஞ்சம் | துப்புரவு ஆய்வாளருக்கு காப்பு |
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய துப்புரவு ஆய்வாளர் கைது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் 196 வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விக்னேஷ்வரன். இவர் ஈஞ்சம்பாக்கம் மயான பூமியின் ஒப்பந்ததாரர் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாநகராட்சி தரும் பணத்தை வழங்குவதற்கு ஆவணம் செய்ய ஒப்பந்ததாரரிடமே ரூபாய் 5000 லஞ்சம் கேட்பதாக ஒப்பந்தம் எடுத்த ரஞ்சித் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இரசாயணம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் பணத்தை ரஞ்சித் மூலம் துப்புரவு ஆய்வாளர் விக்னேஸ்வரன் என்பவரிடம் கொடுத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
233 உடல்களுக்கான பணத்தை தருவதற்கு கடந்த ஒரு மாதக் காலமாக 10 சதவீதம் தொகையை லஞ்சமாக கேட்டு தொந்தரவு செய்ததால் புகார் அளித்ததாக ரஞ்சித் தெரிவித்தார்…
செய்தி மாவீரன்