Mon. Jul 8th, 2024

எட்டிப் பிடிப்பாரா.! காவல் ஆணையர் AKV,.?

சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பு ஏற்ற நாள் முதல் சிறப்பாக பணியாற்றி வருபவர் திரு A.K.விஸ்வநாதன் அவர்கள் இவர் தனது பணியாற்றிய நாட்களில் பல சவால்களை சந்தித்து, அதை சுக்கு நூறாக்கி தான் ஒரு வல்லவர் என நிரூபித்தது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் இவரது பதவிக் காலத்தில் தான் குண்டர் சட்டம் அதிகமாக போடப்பட்டதும். குறிப்பாக பத்திரிகையாளர்கள் மீது காவல் துறைக்கு எதிரான பல்வேறு பொய் வழக்குகளும் குண்டர் சட்டமும் அதிகளவில் பதிவு செய்ததும் இவரது ஒரு மைல் கல் சாதனையாகும்.

மேலும் இந்த கொரோனா காலத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க போகிறதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து சில நாட்களாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. மேலும் வருகிற 30ம் தேதி உளவுத்துறை ஐஜி ஆக தற்போது உள்ள திரு. சத்தியமூர்த்தி அவர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில். முதல்வருக்கு நம்பிக்கையாக உள்ள திரு.ஏ.கே.வி., அவர்கள் பதவி உயர்வு பெற்று உளவுத்துறை ஏடிஜிபி ஆக அந்த இடத்திற்கு வர வாய்ப்பு உள்ளதாகவும். அதற்காக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து வருவதாகவும் தகவல்?. ஏ.கே.வி., அவர்களுக்கு ஆதரவாக உள்ள ஆளும் கட்சி பிரமுகர் மற்றும் அமைச்சர்கள் சிலர் உதவியுடன் அந்த பதவிக்கு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி அறப்போர் இயக்கம் சார்பில் காவல் ஆணையர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறி அவரை பணி நீக்கம் செய்ய வேண்டி உள்துறை செயலர் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி அவர்களிடமும் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009 ஆம் ஆண்டில் இவர் மீது சொத்துக்குவிப்பு புகார் ஒன்றை தமிழக மக்கள் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த திரு.புகழேந்தி என்பவர் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பிறகு நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டவர் என்பதால் இவருக்கு உயர் பதவி தற்போது கிடைக்க வாய்ப்பில்லை எனவும் சில ஐபிஎஸ் அதிகாரிகளுக்குள் பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தெரிகிறது.

தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவிக்கு முதல் தரவரிசையில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் அதிகளவில் பேசப்படுகிறது. திரு.ஜெயந்த் முரளி ஐபிஎஸ் மற்றும் திரு.சந்தீப் ராய் ரத்தூர் ஐபிஎஸ் இருவரில் திரு. ஜெயந்த் முரளி அவர்களுக்கே ஜெயம் கிடைக்கும் என காவல்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எது எப்படியோ அந்த உயர் பதவிக்கு நம்ம ஏ.கே.வி., அவர்கள் வருவதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் சில ஐபிஎஸ் அதிகாரிகள் இருந்தாலும், கொங்கு மண்டல அரசியல் பலத்துடன் எங்கள் ஏ.கே.வி., எட்டிப் பிடிப்பாரா.,?.
பார்ப்போம்…!!!

திருச்சிற்றம்பலம்