உணவு சப்ளை என்ற பெயரில் ஒருவர் | ZOMATO உடையில் கஞ்சாவுடன் பிடிப்பட்டார் |
சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது.
ZOMATO நிறுவனம் ஒன்றின் உடையுடன் ஒருவர் கஞ்சா சப்ளை செய்ய முயன்ற போது அந்த நபர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குணசேகர் என்றும் தான் ஒரு பிரபல உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தில் ஊழியர் எனவும் மேலும் தான் OMEGA Health care போன்ற நிறுவனங்களில் பணியாற்றுவது போன்ற அடையாள அட்டைகளை காண்பித்து உள்ளார்..
பலர் தங்களது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து அன்றாட வருமான தேவைக்காக SWIGGY, ZOMATO போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் நிலையில் அதை தவறாக பயன்படுத்தி சிலர் அவர்களது இருசக்கர வாகனங்களில் பிரஸ் என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு இரவு நேரங்களில் வலம் வருவதை பல பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்துள்ளன. சில மாணவர்கள் தங்களது கல்லூரி கட்டணத்திற்கும் இந்த தொழிலை செய்து வரும் நிலையில் அதை பயன்படுத்தி இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உணவு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி கஞ்சா கடத்திய நபர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் ZOMATO ஊழியர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் இதுபோன்ற நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களை போலீசார் கண்காணித்து அவர்கள் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது தலைக்கவசம் அணியாமல் கைப்பேசிகளில் பேசிக்கொண்டு அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படவும் காரணமாகி விடுகின்றபடியால் சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்கள் இவர்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றனர்…
நிருபர் வெ.ராம்