Sun. Oct 6th, 2024

கோயம்பேடு காய்கறி அங்காடி பணியாளர்கள் 252 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது |

கோயம்பேடு மார்க்கெட்டில் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் 252 – ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை |

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே நிபந்தனைகளோடு திறக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த மார்கெட்டில் மட்டும் 3 ஆயிரம் கடைகள் உள்ளது. இங்குள்ள கடைகள் மூலமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த காய்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் கோயம்பேடு அங்காடி குழுமம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை 252 பேர் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் துப்புரவு மற்றும் இதர அத்தியாவசிய பணிகளில் மேற்கொள்ளும் 252 ஊழியர்களுக்கு சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் திரு.கார்த்திகேயன் அவர்கள் தலா 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கினார். இந்நிகழ்வில் முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் ஆகியோர் உடனிருந்தனர்…

நமது சிறப்பு நிருபர்