சென்னைக்கு அருகே கடந்த 10 ஆண்டுகளாகஇயற்கை விவசாயம் குவியும் பாராட்டுக்கள்|
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நூத்தஞ்சேரி கிராமத்தில் மண் வளத்தைக் காக்கும் வகையில் விவசாயி ஒருவர் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து சாதனை படைத்து வருகிறார். மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி தீனதயாளன் தனது 13 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய, நெல் ரகங்களைக் கொண்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றார். அவர் குடும்ப சூழல் காரணமாக பட்டபடிப்பை பாதியில் நிறுத்திய அவர் கடந்த 10-ஆண்டுகளுக்கு முன் நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் அவர்களின் விவசாய முறையை முன்னெடுத்து செலவு இல்லாமல் குறைந்த நீர் பாசனத்தில், குறைந்த மின்சாரத்தில், பணியாட்கள் செலவை குறைக்கும் தொழிற் நுட்பத்துடன், நாட்டுக் கால் நடைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யும் முறையை கேள்விப்பட்டு தான் ஈர்க்கப்பட்டு தனது 13 ஏக்கரில் தற்போது 10 ஆண்டுகாலமாக எந்த பின்னடைவையும் சந்திக்காமல் நஷ்டமின்றி லாபம் ஈட்டி வருகிறார். இந்த சென்னை புறநகர் இயற்கை விவசாயி தீனதயாளன் தனது விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் கிணறு அமைந்துள்ள பகுதி அருகே மாட்டு தொழுவம் அமைத்து நாட்டு மாடுகளான 1- காங்கிரச், 2- தார்பார்க்கர், 3- உமலஞ்சேரி மாடுகளைக் கொண்டு அதன் சானம் கோமியம் கழிவுகளுடன் வெல்லம் மற்றும் புண்ணாக்கு இவை அனைத்தையும் சேர்த்து கரைசலாக ஒரு தொட்டியில் சேகரிக்கப்பட்டு பின்னர் வயலுக்கு நீர் பாசனத்துடன் சேர்த்து வேக்யூம் முறையில் பயிருக்கு பாசனம் செய்து வருகிறார். இதன் விளைவாக பத்து ஆண்டுகளில் ரசாயனம் அல்லாத இயற்கை உரமாக இந்த ஜீவாமிர்தம் கரைசலை உபயோகித்து கடந்த பத்து ஆண்டுகளில் கிச்சலி சம்பா, வெண்பொன்னி நெல் ரகங்களை நல்ல முறையில் மகசூல் கிடைத்து அறுவடை செய்து வருவதாக தெரிவிக்கின்றார், தீனதயாளன்…
மேலும் அவர் தனது மாட்டிற்கு அவர் நிலத்தில் தனியாக ஒரு பகுதியை ஒதுக்கி அதில் ஒரு ஏக்கரில் சூப்பர் நிப்பேர் எனப் பசும் மாட்டு தீவனம் வளர்த்து வருகிறார் மாட்டிற்கு இந்த தீவனம் மட்டுமே கொடுத்து வருகிறார்.
செயற்கை உரமிட்டு உற்பத்தியில் செய்யகூடிய அரிசி வகைகளில் நச்சு தன்மை இருப்பது அனைவரும் அறிந்ததே தற்போது இயற்கை விவசாயத்தில் அமுதகரைசல் மூலம் 10 வருடகாலம் பூச்சி தாக்கம் இல்லாமல் நல்ல முறையில் ஆரோக்கியமான சக்தி மிகுந்த நெல் ரகங்களை பயிரிட்டு சாதித்து வரும் சென்னை புறநகர் இயற்கை விவசாயி தீனதாயாளன் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன…
பேராண்மை செய்தி குழு