5.18- லட்சம் அமெரிக்கா டாலருடன் பிடிப்பட்ட | புதுக்கோட்டை இளைஞர்கள் |
சென்னையில் இருந்து நேற்று காலை மலேஷியாவுக்கு செல்ல உள்ள விமானம் புறப்பட தயாராக இருந்தது, அப்போது அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது என்பவரை தனது நண்பர்களுடன் பரிசோதனை வரிசையில் நின்று கொண்டு இருந்தார். அவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 5.18, லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் கத்தை கத்தையாக பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் பறிமுதல் செய்த பணத்திற்கு உண்டான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால் அதிகாரிகள் அவர்களை கைது செய்ததாக கூறப்படுகிறது…
பேராண்மை செய்தி குழு