சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியிடம் | 231 கிராம் தங்கம் பிடிபட்டது |
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சார்ந்த முகமது ஜாபர் என்பவர் கொண்டு வந்த கைப்பையில் சோதனை செய்தபோது அதில் இரண்டு கைப்பிடி உள்ள ஒரு ஏர் பம்பு (Air pump) இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அதை உடைத்து பார்த்தபோது அந்த கைப்பிடிகளில் 9.9, லட்சம் மதிப்புள்ள 231, கிராம் தங்க ராடுகள் கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
பேராண்மை செய்தி குழு