Fri. Dec 20th, 2024

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய இரு பெண்கள் | விமான நிலையத்தில் கைது |

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை இலங்கையில் இருந்து சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஸ்ரீலங்காவை சேர்ந்த பாத்திமா ரியானா மற்றும் பாத்திமா சைனப் ஆகிய இரண்டு பெண்களையும் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். பிறகு அவர்கள் இருவரையும் தனியறையில் வைத்து சோதனை செய்தபோது அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் பாக்கெட், zip மற்றும் இடுப்பு பகுதி, மற்றும் மேலாடையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அவர்களிடமிருந்த 54.61 லட்சம் மதிப்புடைய 1.2 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

பேராண்மை செய்தி குழு