Fri. Dec 20th, 2024

மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் | மூட்டை மூட்டையாக ஆணுறைகள் |

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுங்குன்றம் ஊராட்சியில் உள்ள சாந்தகுப்பம் இங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்தும் உள்ள பகுதிகளில் கால்நடை உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கும் ரப்பர் கழிவுகளான ஆணுறைகளை இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் கொட்டிவிட்டு போவதாக புகார்கள் எழுந்துள்ளது‌. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலமுறை புகார் அளித்த வண்ணம் உள்ளனர். மேலும் நேற்று இரவும் இரண்டு லாரிகளில் வந்த மர்ம நபர்கள் மீண்டும் ரப்பர் கழிவுள்ள மூட்டைகளை அப்பகுதியில் வந்து கொட்டிவிட்டு சென்றுள்ளனர்..

இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்றும் இரவு நேரங்களில் இப்பகுதியை சற்று கண்காணித்து குற்றவாளிகளை பிடித்து கைது செய்யுமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

பேராண்மை செய்தி குழு