Sun. Oct 6th, 2024

சுமார் 900 கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களை சரக்கு – சேவை வரித்துறையினர் கைது செய்தனர் |

சுமார் 900 கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களை சரக்கு – சேவை வரித்துறையினர் கைது செய்தனர் |

சரக்கு மற்றும் சேவை வரி துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுமார் 900 கோடி அளவிற்கான போலியான கம்பெனிகள் மூலம் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது தெரியவர, இந்த போலியான கம்பெனிகள் மூலம் சுமார் 150 கோடி ரூபாய் பல்வேறு கம்பெனிகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த குற்றச் செயலின் மூளையாக செயல்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஏராளமான பொது மக்கள் இடமிருந்து அவர்களின் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை ஆகியவற்றை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு லோன் வாங்கி தருவதாக கூறி அவர்களின் சான்றுகளை வைத்து பல போலியான கம்பெனிகளை தொடங்கி அதன் மூலம் போலியான பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதுடன் போலி பில்களை தயாரித்து உள்ளனர். இதன் மூலம் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளை பல்வேறு கம்பெனிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி துறையின் வரி எய்ப்பு செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் இந்த குற்றச் செயலில் மூளையாக செயல்பட்ட நபர் வீட்டில் இருந்து சுமார் 24 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் அவருடைய கூட்டாளி ஒருவரின் வீட்டிலிருந்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்ட நபர் உட்பட 3 பேரையும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பேராண்மை செய்தி குழு