இரவில் வாகனங்களில் உள்ள தொடர்ந்து பேட்டரிகள் திருடியதாக மூவர் கைது |

இரவில் தொடர்ச்சியாக வாகனங்களில் பேட்டரிகளை திருடியதாக மூவர் கைது |
சென்னை கே.கே.நகர் சாலைகளில் இரவு நேரத்தில் நிறுத்தியுள்ள டாட்டா மேஜிக் SHARE AUTO க்களில் உள்ள பேட்டரிகள் திருடு போவதாக தொடர்ந்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் வந்ததையடுத்து…

குறிப்பாக முனுசாமி சாலை, லட்சுமிபதி சாலை ஆகிய இடங்களில் மட்டும் 30க்கும் மேற்பட்ட ஆட்டோவில் இருந்த பேட்டரிகள் திருடு போனதால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கே.கே.நகர் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பார்த்திபன், நரசிம்மன், ரியாஸ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் உள்ள 15 பேட்டரிகளையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
பேராண்மை செய்தி குழு