Fri. Dec 20th, 2024

இருசக்கர வாகனங்களை திருடி அதைவைத்து | செயின் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது |

ஆட்டோவில் சென்று இருசக்கர வாகனங்களை திருடி | அதைவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது |

சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் 6வது குறுக்கு தெருவில் தனியார் குடியிருப்பில் வசித்து வந்த ஐடி ஊழியர் ரஞ்சித் என்பவரின் இருசக்கர வாகனத்தை கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி நள்ளிரவு ஆட்டோவில் வந்த மூன்று பேர் திருடி சென்ற சிசிடிவி காட்சியுடன் ரஞ்சித் துரைப்பாக்கம் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 7ம் தேதி அதே பகுதியில் வசித்து வந்த நடேசன் என்பவரின் இருசக்கர வாகனமும், கடந்த 15ம் தேதி சாந்தி நிகேதன் காலனி, சுப்ராயன் நகரில் அபாஸ் உன் நபீயுல் என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றதாகவும் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து துரைப்பாக்கம் காவல் நிலைய சரகத்தில் இருசக்கர வாகனங்கள் திருடி சென்ற நபர்களை தீவிமாக தேடிவந்த தனிப்படை போலீசார் சுமார் 150 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கரண்குமார் (21), அஜித் (23), கோட்டீஸ்வரன் (21) ஆகிய மூவரை கைது செய்து அவர்களிடம் விசரணையில் நடத்தியதில் மூன்று பேரும் ஆட்டோவில் சென்று முதலில் எந்த பகுதியில் திருடுவதற்கு ஏதுவாக உள்ளது, என நோட்டமிட்டு வந்துவிட்டு நள்ளிரவுக்கு மேல் இருசக்கர வாகனத்தை திருட ஆட்டோவில் தலைக்கவசம் அணிந்து குடியிருப்புகளில் நிறுத்தி வைத்திருக்கும். இருசக்கர வாகனத்தை திருடி வந்ததாகவும் தெரிவித்தனர். 

திருடிய இருசக்கர வாகனத்தை வைத்து சாலையில் செல்வோரிடம் செல்போன், செயின் பறிப்பில் ஈடுபட்டும் பின்னர் வாகனத்தை புதுப்பேட்டையில் விற்பனை செய்து விடுவார்கள் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனம், திருட பயன்படுத்திய ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்…

பேராண்மை செய்தி குழு