SDPI கட்சி ஓசூரில் நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் |
SDPI கட்சி ஓசூரில் நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் |
SDPI கட்சி மாநில பேச்சளர் முகமத் உசேன் பொதுக்கூட்டத்தில் பேசியது ; இந்த குடியுரிமைச் சட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்றால் இந்த சட்டம் மதச்சார்பற்ற இந்தியாவில் வாழக்கூடிய மக்களை மத அடிப்படையில் பிரிக்கிறது எனவே இதனை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த சட்டம் இந்தியாவில் இருக்கின்ற தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது குடியுரிமை அளிக்கப்பட்ட ஒரு இந்து ஆவணங்கள் சரியில்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர் விரும்பி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொள்வார் என்று சொன்னால் உடனடியாக அவர் குடியுரிமை பறிக்கப்பட்ட நபராக மாறுகிறார் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு இந்திய குடிமகன் அனைவருக்கும் உரிமை உள்ளபோது இந்த சட்டம் அந்த சுதந்திரத்தை பறிக்கிறது…
இந்தியாவில் இருக்கும் இந்த மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களை சரியான ஆவணங்கள் இல்லை என்ற காரணம் காட்டி அவர்களை குடியுரிமை அற்றவர்களாக மாற்றுகிற அபாயம் இருக்கின்ற காரணத்தினால் இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். அண்டை நாடுகளில் இருக்கும் இந்துக்களை ஏற்றுக்கொள்ளும் இந்த சட்டம் நமது அண்டை நாடான இலங்கையில் இருந்து வரும் ஈழத்தமிழர்களை ஒப்புக் கொள்வதில்லை இதன் மூலம் பாசிசத்தை எதிர்க்கும் தமிழக மக்களை தமிழர்களை அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்றால் ஈழத் தமிழர்கள் என்று முத்திரை குத்தி அகதிகள் முகாமிற்கு அனுப்ப முடியும் என்கின்ற ஒரு மிரட்டலான சட்டத்தை சட்டத்தை இயற்றி இருப்பதன் காரணத்தினால் மிகவும் கடுமையாக நாங்கள் இதனை எதிர்க்கிறோம் என்று தனது உரையில் அவர் தெரிவித்தார்…
பேராண்மை செய்தி குழு