Sun. Oct 6th, 2024

கவர்னரின் உதவியாளர் என கூறி மோசடி | போலி ஐஏஎஸ் அதிகாரி கைது |

கவர்னரின் உதவியாளர் என கூறி மோசடி போலி ஐஏஎஸ் அதிகாரி கைது. வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி பல பிரமுகர்கள் உடன் இணைந்து எடுக்கப்பட்டதை போல போலி புகைப்படம் கொண்டு மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களான குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்டதை போன்ற போலியான புகைப் படங்களை காட்டி வேலை தேடும் நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் நேரடி கண்காணிப்பில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவினர் பாதிக்கப்பட்ட திருமதி. சரோஜாதேவி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நெல்லூரை சேர்ந்த சேஷைய்யா, திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த தியாகராஜ், சென்னையை சேர்ந்த டேனியல்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த மோசடி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவர மேலும், இவர்கள் தங்களுக்கு துணை ஜனாதிபதி, முன்னாள் மத்திய அமைச்சர்கள், ஆகியோரை தெரியும் என்றும் அவர்கள் சிபாரிசுடன் சரோஜா தேவியின் தம்பிக்கு துறைமுகத்தில் இன்ஜினியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் பெற்று ஏமாற்றியதும் அது மட்டும் இல்லாமல் டேனியல்ராஜ் தன்னை விஜயகுமார் என்றும் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் கூறியுள்ளார். தான் தமிழக ஆளுநரின் நேர்முக உதவியாளர் என்று அறிமுகபடுத்திக் கொண்டு ஓட்டலுக்கு வரவழைத்து சான்றிதழ்களை பெற்று மோசடி செய்துள்ளார்..

இந்நிலையில் விஜயகுமார் ஐஏஎஸ் அதிகாரி போல நடித்த விஜயகுமார் (எ) டேனியல்ராஜ்‌ என்பவரை கடந்த 20ம் தேதி கைது செய்து விசாரணை செய்ததில் இவர் இதுபோன்று பலரை ஏமாற்றி சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பெற்று மோசடி செய்துள்ளதும் விசாரணையில் தெரியவர டேனியல்ராஜ் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ளதாகவும் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்…

பேராண்மை செய்தி குழு