Fri. Dec 20th, 2024

சைதாப்பேட்டையில் மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்டு? | அதிமுக நிர்வாகிகள் தாக்குதல் |

கமிஷன் பணத்திற்காக அதிமுக நிர்வாகிகள் தாக்குதல்? சிசிடிவி காட்சிகள் இருந்தும் புகார் அளிக்கவில்லை |

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சின்னையா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவர் தனது மகன் ராஜ்குமார் இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள ஜோன்ஸ் சாலை அருகே குப்பைகளை பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மாநகராட்சியில் ஒப்பந்ததாரர் ஆகவும் இருந்து வருகிறார். அங்குள்ள அம்மா உணவகம் அருகே குப்பைகளை பிரித்தெடுக்கும் இடம் ஒன்றை மாநகராட்சியில் ஒப்பந்தம் எடுத்து தொழில் செய்து வருகிறார்…

https://youtu.be/ns_wmK341Bw

இந்நிலையில் நேற்று சைதாப்பேட்டை அதிமுக பகுதி துணைச் செயலாளர் சந்தோஷ் ராஜா மற்றும் 142வது வட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் ராஜ்குமார் ஆகியோரை கமிஷன் பணம் கேட்டு மிரட்டியதாகவும்? அதற்கு அவர்கள் கமிஷன் தர மறுத்ததாகவும் ஆகையால் இருவரையும் அவரது ஆதரவாளர்களை வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்த சம்பவம் முழுவதும் ராஜ்குமார் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கூடாது என ஆளும் கட்சி தரப்பில் மிரட்டல் வந்துள்ளதாக? இதுவரையில் ராதாகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த கொலைவெறி தாக்குதலில் ராதாகிருஷ்ணன் படுகாயம் அடைந்துள்ளார். அவரது மகன் ராஜ்குமாரின் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டு அவர் எழும்பூர் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்…

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 142வது வார்டில் அதிமுக பகுதி துணைச் செயலாளரான சந்தோஷ் ராஜா என்பவர் வேட்பாளராக போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது?…

சந்தோஷ் ராஜா

பேராண்மை செய்தி குழு