Fri. Dec 20th, 2024

லோடு வாகனங்களை குறிவைத்து திருடிய நபர் கைது | வாகனங்கள் பறிமுதல் |

லோடு வாகனங்களை குறிவைத்து திருடிய நபர் கைது | வாகனங்கள் பறிமுதல் |

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் தேனாடுகொம்பை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Bolero மற்றும் லோடு வாகனங்கள் திருட்டு போனதாக அளித்த புகாரின் பேரில் மேல் குன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயராமன் உட்பட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற இடங்களில் கிடைத்த சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தபோது இரு நபர்கள் வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகளை வைத்து அதில் பதிவாகி இருந்த நபர்களின் அடையாளங்களை வைத்து சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் கடந்த சில மாதங்களாக கோத்தகிரி பகுதியில் வேலை செய்து வந்த விஜி (23) என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததால் இவரை கடந்த சில நாட்களாக சேலம், ஈரோடு, திருப்பூர் என பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் வழக்கமாக இவர் வரும் ஒரு இடத்தில் வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் லோடு வாகனங்கள் மற்றும் Bolero வாகனங்களை தனது நண்பருடன் சேர்ந்து திருடியதாக விஜி என்பவர் ஒப்புக்கொண்ட நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…

பேராண்மை செய்தி குழு