Fri. Dec 20th, 2024

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |

நட்சத்திர குறியீட்டில் 18வது வரக்கூடிய கேட்டை நட்சத்திரம் இரத்தின காப்பின் உருவத்தை கொண்டது. நட்சத்திர அதி தேவதை இந்திரனும், அதிபதி புதனும் குறிக்கப்படுகின்றனர். கணத்தில் ராட்சஷ கணமும், விலங்கு ஆண்மான், மரம் பராய் மரத்தையும் குறிக்கின்ற கேட்டை நட்சத்திரம் பறவை இனத்தில் மழையில் ஆனந்தமாக ஆகாயத்தில் சுற்றி வரும் சக்கரவாள பறவையை குறிக்கின்றது. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திர அதிபதி புதனைப்போன்ற புத்தி கூர்மையுடன் விளங்குவீர்கள். நட்சத்திர அதிபனான இந்திரனை போன்ற பதவிகளை அடைவீர்கள். சந்திரனோ அல்லது லக்கின புள்ளியோ கேட்டையில் அமையப்‌ பெற்றவர்கள் இருவேறு குணங்களை கொண்டிருப்பீர்கள். நிஜத்தில் ஒன்றும் நிழலில் ஒன்றுமாக இருக்கின்ற உங்களுக்கு அரசியல் ஏற்ற துறையாகும். சந்திரன் ராசியில் வலுவிழப்பதால் கற்பனை வளம் குறைந்தும் யதார்த்த குணம் மிகுந்தும் காணப்படும். கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கின்ற கிரகங்கள் பலன்களை தாமதப்படுத்தும். சுய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேட்டை நட்சத்திர சாரத்தில் இருந்தால் வயது வித்தியாசம் அதிகம் உள்ளவர் வாழ்க்கை துணைவராக அமைவார். அதே போன்று தனாதிபதியான இரண்டாம் அதிபதி கேட்டையில் இருந்தால் பண பிரச்னைகளை உருவாக்கி பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவார்…

தொழிலை பொறுத்த வரையில் பாதுகாப்புதுறை சம்மந்தமான தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். 10ஆம் அதிபதி பலம் பெற்று கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பு கொண்டால் உச்சபட்ச பாதுகாப்பு பிரிவான Z பிரிவு பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றுவீர்கள். பரிகாரம் – புதன்கிழமை நாட்களில் சென்று அண்ணாமலையாரைதொழுது வழிபட்டு, கிரிவலப் பாதையில் உங்களின் நட்சத்திர அதிதேவதை இந்திரனால் வணங்கப்பட்ட இந்திர லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து, 5,14,23,32,41,50, எண்ணிக்கை உடைய ஏழைகளுக்கு இனிப்புடன் அன்னதானம் செய்து தலா 50 ரூபாய் தானமாக செய்துவர உத்யோக உயர்வோடு இந்திரபோக வாழ்க்கை அமைவதை கண்கூடாக காணலாம்…

அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ் தொடர்புக்கு -9003061806