Fri. Dec 20th, 2024

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |

நட்சத்திர குறியீட்டில் 17வதாக வரக்கூடிய அனுஷம் நட்சத்திரம் அலங்கரிக்கப்பட்ட தோரண வாயிலின் வடிவத்தை கொண்டது அதிதேவதை மித்ரா என்றும் குறிக்கப்படுகின்றார். ஆதித்யர்களில் ஒருவரான இவர் உங்களுடைய லட்சியங்களை பூர்த்தி செய்பவர்.தேவ கணமான அனுஷத்தின் அதிபதி சனிதேவர், விலங்கு பெண் மான் ஆகும் நட்சத்திர மரமாக மகிழ மரமும், பறவையாக வானம்பாடியும் குறிக்கப்பட்டுள்ளது. அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசக் கூடியவர்கள். மக்களுடைய செல்வாக்கைப் பெற்ற எளிதில் பிரபலம் அடைபவர்கள். உங்கள் லட்சியத்திற்கு தோதாக இருப்பவர்களிடம் மட்டுமே பழகுவீர்கள். வீணாக காலம் கழிக்கும் நபர்களை விட்டு விலகி இருப்பீர்கள். பிறந்த இடத்தை விட்டு வெகு தூரத்தில் வாழும் உங்களுக்கு பயணங்கள் மகிழ்ச்சி அளிக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடும் கடவுளின் நம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்படும். ராசி அதிபனாக செவ்வாயும் நட்சத்திர அதிபனாக சனிதேவனும் இருப்பதால் எச்சரிக்கை உணர்வு மிகுந்து காணப்படும். குறிப்பாக உங்களின் எதிரிகளை ஆராய்ந்தபடியே இருப்பீர்கள். தக்க சமயம் பார்த்து பொறுமையுடன் காத்திருக்கும் பட்சத்தில் தருணம் வந்தவுடன் செயல்வேகத்துடன் வீழ்த்துவதில் செவ்வாயின் குணத்தை பெற்று இருப்பீர்கள். உதாரணமாக அமைதியான நீர்நிலைக்குள் காத்திருக்கும் முதலையை குறிப்பிடலாம் அரசியலுக்கு ஏற்ற குண நலன்களை பெற்று இருப்பீர்கள். லட்சியத்தில் குறியாக இருக்கக்கூடிய உங்களுக்கு வெற்றி மகுடம் உறுதியாக கிடைக்கும். நல்ல காரியங்களுக்கு உகந்த நட்சத்திரமாக அனுஷம் விளங்குகின்றது. பரிகாரம்- உங்களின் நட்சத்திர விலங்கான மானை மழுவாக வைத்திருக்கும் சிவனை வணங்கி வர லட்சியம் பூர்த்தியாகும். குறிப்பு திருவொற்றியூர் சென்று சிவனையும் அம்பாளையும் வணங்கி ஸ்தல விருட்சமாக விளங்கும் மகிழ மரத்தடியில் சென்று பக்தியுடன் உங்கள் லட்சியத்தை நினைத்து பிராத்தனை செய்தால் விரைவில் நல்லது நடக்கும் செவ்வாய்க்கிழமை அன்று 9- ஏழைகளுக்கு இனிப்புடன் கூடிய அன்னதானம் செய்து காணிக்கையாக தலா 45 ரூபாய் தானமாக தந்து பரிகாரத்தை பூர்த்தி செய்தால் நோய்,
எதிரிகள், கடன் தொந்தரவுகள் நீங்கும்…

அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ் தொடர்புக்கு -9003061806