ஐயப்ப மாலை அணிந்துக் கொண்டு | பல இடங்களில் திருடிய வழக்கில் ஒருவர் கைது |
ஐயப்ப பக்தரை போல மாலை அணிந்து கொண்டு | செல்போன் மற்றும் கோயில் உண்டியல் திருடும் நபர் கைது |
சென்னை கே.கே.நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலைபோட்டவர் போல நடித்து திருட்டில் ஈடுபட்ட காரப்பக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (47).இவர் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களை தேர்வு செய்து திருடும் பழக்கம் உள்ளவர். கடந்த 6ம் தேதி கே.கே.நகர் ஐயப்பன் கோவிலில் சிலர் இருமுடிகட்டி சபரிமலைக்கு புறப்படுவதை அறிந்து சபரிமலைக்கு மாலை அணிந்தவர் போல வேடமிட்டு சென்று அங்கிருந்த கைப்பையை தூக்கி கொண்டு நழுவி விட்டார். பின்னர் பைக்கு சொந்தக்காரர், பிரதீபா கைப்பை காணவில்லை என்று கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கைப்பையில் தனது செல்போன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த செல்போன் சிக்னலை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதே நேரம் கோவிலில் இருந்த சிசிடிவி. காட்சிகளை ஆராய்ந்ததில் செந்தில்குமார் கைப்பையை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததால் செந்தில் குமாரை பின் தொடர்ந்த தனிப்படை போலீசார் நெசப்பக்கம் அருகே ஒரு கடையில் வைத்து செந்தில் குமாரை மடக்கிப் பிடித்தினர்.கடந்த மாதம் மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபம் மொய் பணம் மற்றும் தங்க நகைகள் திருடிய வழக்கில், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகி இருந்த திருடனும் செந்தில் குமார் தான் என்பதும் உறுதியானது. ஏற்கனவே தனது 3 வது மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்டவர். திருமண வீடுகளில் நடனமாடும் குழு நடத்திவந்த அவர், பின் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வந்த செந்தில்குமார், பின்னர் திருட்டு தொழில் செய்ய தொடங்கியுள்ளார்…
கடந்த மாதம் நெசபாகத்தில் உள்ள ஒரு கோவிலில் உண்டியலை திருடியது, பாண்டிபஜார் பகுதியில் செல்போன் திருட்டு என பல திருட்டு வழக்குகள் இவர் மீது உள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்…
பேராண்மை செய்தி குழு