காவல் நிலையத்தின் எதிரில் பெண்ணை | கத்தியால் குத்திய காவலர் கைது |
காவல் நிலையத்தின் எதிரில் பெண்ணை | கத்தியால் குத்திய காவலர் கைது |
அம்பாசமுத்திரம் ஆத்துச் சாலை பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் மகன் தட்சிணாமூர்த்தி (39). இவர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். கடையம் காவல் நிலைய அருகில் விநாயகம் என்பவரின் மகள் முப்பிடாதி சக்தி (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரைப் பிரிந்து தனது இரண்டு மகள்கள் திவ்யா (11) ஜோதி (7) ஆகியோருடன் தனது தாயுடன் வசித்து வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன் தட்சிணாமூர்த்தி என்ற காவலர் கடையம் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது முப்புடாதி சக்கியுடன் தகாத முறையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தட்சிணாமூர்த்தி கடையம் காவல் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்து வருகிறார். இதையடுத்து முப்புடாதி சக்திடன் தொடர்பில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. முப்புடாதி சக்தி தற்போது வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளதால் ஆத்திரம் அடைந்த காவலர் தட்சிணாமூர்த்தி இரவு 7- மணியளவில் கடையம் காவல் நிலையம் எதிரே உள்ள முப்புடாதி சக்கி வீட்டிற்கு கத்தியுடன் வந்த தட்சிணாமூர்த்தி, அவரை தலையிலும் காதிலும் குத்தியுள்ளார். இதில் பலத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டிஎஸ்பி ஜாகிர் உசேன் ஆய்வு செய்து பிடிபட்ட காவலர் தட்சணாமூர்த்திக்கும் முப்புடாதி சக்திக்கு தகாத பழக்கம் இருந்து வந்துள்ளது தான் பிரச்சனைக்கு காரணம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்..
காவலர் தட்சிணாமூர்த்தி ஆலங்குளம் டிஎஸ்பி ஜாகிர் உசேன் அவர்களுக்கு சில காலம் வாகனம் ஓட்டியதாகவும் அப்போது அவருக்கு ஆதரவாக செயல்பட்டதால் இப்போது இந்த வழக்கு காவலர் தட்சிணாமூர்த்திக்கு ஆதரவாக இருக்கலாம் என அப்பகுதி காவலர்கள் தெரிவிக்கின்றனர்…
பேராண்மை செய்தி குழு