அமைச்சர் இல்லத்தில் பணியில் இருந்த காவலர்களுடன் | போதை ஆசாமி ஒருவர் வாக்கு வாதம் |
அமைச்சர் இல்லத்தில் பணியில் இருந்த காவலர்களுடன் | போதை ஆசாமி ஒருவர் வாக்கு வாதம் |
சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் வீட்டிற்கு வெளியே மர்ம நபர் ஒருவர் போதையில் காரை நிறுத்தி தூங்கி கொண்டிருந்தார். இதனால் முதல்வர் இல்ல நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரிடம் சென்று பல உயர் அதிகாரிகள் தங்கும் இடம் அதனால் இங்கு காரை நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் காவலர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது மேலும் அந்த நபர் காவலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடும் போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். பின்னர் இதனால் கோபமடைந்த அவர் தன்னுடைய சட்டையை கிழித்து கொண்டு தான் யார் என்று தெரியுமா என வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதாகவும். போலீசார் வாகனம் வருவதை பார்த்து காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று உள்ளதாகவும். அந்த மர்ம நபர் மீது அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர்கள் இல்லத்தின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் யாரிடமும் கைபேசி இல்லையா? அல்லது அதில் கேமரா இயங்காதா? அல்லது சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை முழுவதும் வைத்த சிசிடிவி கேமரா முக்கிய இடமான அமைச்சர்கள் வீடுகளின் அருகே இல்லையா? அதில் அந்த மர்ம நபர் வந்த காரின் நம்பர் தெரியவில்லையா? என்று அப்பகுதி மக்கள் கேள்வி நியாயமானதாக உள்ளது. இதற்கு அபிராமபுரம் உதவி ஆணையர் சுதர்சன் ஐயா என்ன பதில் சொல்ல போகிறார். சில மாதங்களுக்கு முன் வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டி ஒன்று காணாமல் போனதையே கண்டு பிடித்து உரியவர்களிடம் தந்தவர் அதேபோல் விரைவில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான மர்ம நபரையும் பிடித்து விடுவார் என்ற நம்பிக்கை பேராண்மைக்கு உள்ளது.
பேராண்மை செய்தி குழு