மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வழக்கில் | ஒய்வு பெற்ற அரசு ஊழியர் கைது |
மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வழக்கில் | ஒய்வு பெற்ற அரசு ஊழியர் கைது |
சென்னை எம்ஜிஆர் நகர், சூளைப் பள்ளம் சிவா விஷ்ணு கோவில் தெருவைச் சேர்ந்த 11வயது சிறுமி கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்த முருகன் (63) அந்த மாணவி பள்ளி முடிந்து தினந்தோறும் முருகன் வீட்டு வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்ற மாலை 4.30 மணி அளவில் அவ்வழியே தனியாக சென்று கொண்டிருந்த மாணவியிடம் முருகன் நலம் விசாரித்து அன்பாக பேச்சு கொடுத்து பின்னர், தனது வீட்டிற்கு வருமாறு மாணவியை அழைத்து சென்றதாகவும். ஆசையோடு வீட்டிற்குள் சென்ற மாணவியிடம் தீடீரென முருகன் அத்துமீறி சில்மிஷம் செய்து உள்ளதாகவும். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அங்கிருந்து தப்பி அழுது கொண்டே தனது வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து அவரது தாயிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். உடனடியாக மாணவியின் தாயார் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட முருகன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், முருகன் ஏற்கனவே 2 முறை மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
பேராண்மை செய்தி குழு