Fri. Dec 20th, 2024

சென்னையில் போதை சாக்லேட் மற்றும் கஞ்சா சப்ளை? | பீகாரை சேர்ந்த மூவர் கைது |

சென்னையில் போதை சாக்லேட் மற்றும் கஞ்சா | வடமாநிலத்தை சேர்ந்த மூவர் கைது |

சென்னை சௌகார்பேட்டை பகுதியில் கஞ்சா, புகையிலை மற்றும் போதை சாக்லேட்டுகள் வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து சப்ளை செய்து வருவதாக பூக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய 11வது பிளாட்பார்ம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த மூன்று வட மாநிலத்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் 25 கிராம் கஞ்சா, புகையிலை மற்றும் 200 போதை சாக்லேட்டுகள் இருப்பதை கண்டு பிடித்தனர். மேலும் இவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சான்வாஷ் வார்சாடி(31), மகூன் குமார்(18), பாபுகுமார் என்பது தெரியவந்தது…

பீகாரில் இருந்து போதை பொருட்களை ரயில் மூலம் கடத்தி வந்து சென்னை சௌகார்பேட்டையில் சப்ளை செய்து வந்தது தெரியவர இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்…

பேராண்மை செய்தி குழு