விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |
நட்சத்திர குறியீட்டில் 16வது வரக்கூடிய விசாகம் நட்சத்திரம் வெற்றியாளரை வரவேற்க காத்திருக்கும் தோரண வாயிலின் வடிவம் கொண்டதாகும். நட்சத்திர அதி தேவதை இந்திராணி ஆவார், நட்சத்திர அதிபதி தேவகுரு, நட்சத்திர விலங்கு பெண் புலி, கணத்தில் ராட்சஸ கணமாகும், நட்சத்திர மரமாக விளா மரமும், நட்சத்திர பறவை செங்குருவி, விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திர அதிபதியான தேவ குருவை போன்றே ஆழ்ந்த அறிவினை பெற்றிருப்பார்கள். ராசி அதிபன் அசுர குருவான சுக்கிராச்சாரியாக இருப்பதால் அறிவுடன் தலைக்கனமும் சேர்ந்தே காணப்படும். கடினமான காரியங்களை கூட எளிதாக செய்து முடிப்பவர்கள். உங்கள் நட்சத்திர ராசியான துலாம் ராசி மிகவும் ஆற்றல் மிகுந்த ராசியாகும் துலாம் ராசியை லக்கினமாக கொண்ட மாவீரன் நெப்போலியனும், அடால்ப் ஹிட்லருமே தகுந்த எடுத்துக்காட்டு தேவ குருவை காட்டிலும் அசுரகுரு பலம் வாய்ந்தவர் ஆவார். சுய ஜாதகத்தின் கிரக நிலைகளை பொறுத்து மட்டுமே ஒருவரின் வாழ்க்கை முறைகள் அமையும் பொதுவாக சுக்கிரன் பலம் பெற்றால் சுயநலம் மிகுந்தும், குருபலம் பெற்றால் பொதுநலச் சிந்தனை மிகுந்தும் காணப்படும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள், மனதைரியம், உடல் வலிமையும் கொண்டவர்கள். செயற்கரிய காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள்…
தொழில்கள் – அரசியல், கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர் இரும்பு வடிவமைப்பு, துணிச்சலுக்கு பெயர் போன ராணுவம், காவல், பத்திரிகை ஊடகம், கனிமசுரங்கங்கள், விமானப்படை, உணவு சார்ந்த ஹோட்டல் தொழில்களில் முன்னேற்றம் ஏற்படும். பரிகாரம் – உங்களின் நட்சத்திர விலங்கான புலியினை வாகனமாக கொண்ட துர்கா தேவியை வழிபட பொருளாதார தடை, கடன் பிரச்சனை, எதிரி பயம், எமபயம் நீங்கும், குறிப்பாக திருக்காறாயில் சென்று அங்குள்ள கண்ணாயிர முடையாரை வியாழக்கிழமை அன்று வழிபட்டு அக்கோயிலில் ஸ்தல மரமான விளா மரத்தினை தொழுதால் மனதில் நினைக்கும் சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும் என்பதை கண் கூடாக காணலாம். குறிப்பு – கட்டுரையில் சொல்லப்பட்டது நட்சத்திர பொதுப்பலன் மட்டுமே அவரவர் சுய ஜாதகத்தின் கிரக நிலையை பொறுத்தே பலன்களை உறுதி செய்ய முடியும்…
அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ் தொடர்புக்கு – 9003061806