Fri. Dec 20th, 2024

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |

நட்சத்திரங்களின் குறியீட்டில் பதினைந்தாவதாக வரக்கூடிய சுவாதி நட்சத்திரம் காற்றில் ஆடும் இளங்கொடியை போன்ற வடிவம் கொண்டது. நட்சத்திர அதி தேவதை வாயு பகவான் ஆவார். நட்சத்திர அதிபதி ராகு, நட்சத்திர கணம் தேவம், நட்சத்திர விலங்கு ஆண் எருமை, நட்சத்திர மரம் மருதமரம், நட்சத்திர பறவையாக தேனீ எனவும் குறிப்பிடுகின்றனர். சுவாதியில் பிறந்தவர்கள் பேச்சு திறமையும் சுதந்திர மனப்பான்மையுடன் உணர்ச்சிகளை எளிதாக கட்டுப்படுத்த தெரிந்தவர்கள். உங்களுக்கு யோகக்கலை சித்தியும் கடவுள், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் சம்பிரதாயங்களை உறுதியாக கடைப் பிடிப்பீர்கள். உங்களுடைய ராசி நட்சத்திரத்தை ஆளுகின்ற சுக்கிரன், ராகு உங்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவார்கள். சுக்கிரன் பொருளையும், ராகு பிரம்மாண்டத்தை குறிப்பதால் உங்களை சார்ந்த விழாக்கள் அனைத்திலும் நிச்சயம் பிரமாண்டத்தை ஏற்படுத்துவதை காண முடியும் கலைத்துறையில் தீவிர ஈடுபாடு கொண்ட நீங்கள் மன திருப்திக்காக தாராளமாக செலவு செய்வீர்கள் நீங்கள் ஆன்மிக பாதையில் சென்றால் உங்கள் இலக்கை அடைவது உறுதி தொழில்கள் – கடல் மீன் விற்பனை வெண்ணெய், நீச்சல் பயிற்சி, உணவு தானிய பொருட்கள், ஐஸ்கிரீம் பார்லர், ஆகிய தொழில்களிலும் முன்னேற்றம் ஏற்படும். சட்டம், காவல்துறை, பத்திரிகை ஊடகங்களில் தலைமை பொறுப்புகள் ஏற்படுத்தும் அமைப்பு உண்டாகும். பரிகாரம் – நட்சத்திர தெய்வமாக வாயு பகவானும் அதிபதியாக ராகு பகவானும் இருப்பதால் வெள்ளி அன்று திருக்காளத்திக்கு சென்று வரவும் லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்க்கை வளமாகும்…

அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ் தொடர்புக்கு -9003061806