சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |
நட்சத்திர குறியீட்டில் 14வது வரக்கூடிய சித்திரை நட்சத்திரம் பளபளக்கும் ஆபரணத்தின் வடிவத்தை கொண்டது நட்சத்திர அதிதேவதை விஸ்வகர்மா, தேவலோக தச்சனாக விஸ்வகர்மா வேத புராணங்கள் குறிக்கப்படுகின்றார் நட்சத்திர அதிபதி செவ்வாய், நட்சத்திர விலங்கு ஆண் புலி, நட்சத்திர கணம் ராட்சஷ கணம், நட்சத்திர மரம் வில்வம், நட்சத்திர பறவை என மரங்கு குறிக்கப்படுகின்றது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் செயல் வேகமும் போராட்ட குணமும் மிகுதியாக இருக்கும். நட்சத்திர அதிபதியான செவ்வாய் பூமிகாரகனாக இருப்பதினால் நில சம்பந்தமான ரியல் எஸ்டேட், விவசாயம் லாபம் தரும் நட்சத்திர தெய்வம் விஸ்வகர்மா என குறிக்கப்படுவதால் கலை நுணுக்க முள்ள கட்டிட வடிவமைப்பாளர், தங்கம் முதலான ஆபரண வடிவமைப்பாளர்கள், மரவேலைகள் சித்திர வேலைப்பாடுகள், போன்ற நுணுக்கமான வேலைகளில் திறமை வெளிப்படும். காதலில் துணிந்து முடிவெடுக்கும் நீங்கள் பொருத்தமான வாழ்க்கை துணைவரை மணந்து இன்பமாக வாழ்வீர்கள். வாழ்க்கை எனும் போர்க்களத்தை உற்சாகம் நிறைந்ததாக விளையாட்டு களமாக எண்ணி ரசிக்க தெரிந்த உங்களிடம் சோதனைகள் தோற்றுப் போகும். உங்களுடைய நட்சத்திர விலங்கான ஆண் புலியை போல பதுங்கும் போது பதுங்கியும் பாயும் சந்தர்ப்பத்தில் பாய்ந்து உங்கள் இலட்சியத்தை அடைவீர்கள். சித்திரை நட்சத்திர கன்னி ராசியில் பிறந்தவர்கள் பதுங்கும் புலியாக சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவீர்கள். சித்திரை நட்சத்திர துலாம் ராசியில் பிறந்தவர்கள் பாயும் புலியாக செயல் வேகம் கொண்டு இலக்கை அடைவீர்கள். திறமை, புத்தியும், பலமும் பெற்ற உங்களுக்கு வெற்றி பெறுவது எளிதான காரியமாகும் பரிகாரம் – வில்வ ப்ரியனான சிவ சங்கரனை பிரதோஷ நாட்களில் ஆலயம் சென்று சிவபெருமானுக்கு வில்வ இலை மாலை சாற்றி வழிபட சர்வ ஐஸ்வர்யம் கிடைக்கும். குறிப்பாக பிரதோஷ நாட்களில் அர்த்த நாரி வடிவமான திருநங்கையர்கள் இனிப்புடன் சேலையும்,வெற்றிலை பாக்குடன் தலா 102 ரூபாய் வீதம் இரண்டு திருநங்கையருக்கு தானமாக தந்து அவர்களிடம் ஆசி பெற்றால் பொருளாதார நிலை உயர்வதோடு பரமேஸ்வரனின் அன்பிற்கும் பாத்திரமாவீர்கள்…
அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ் தொடர்புக்கு – 9003061806