போலி பெண் ஆய்வாளர் மற்றும் பெண் உதவி ஆய்வாளர் | போலி காவலர் மூவரும் கைது |
போலி பெண் ஆய்வாளர் மற்றும் பெண் உதவி ஆய்வாளர், போலி காவலர் மூவர் கைது |
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த சுபாஷினி இவர் மாம்பழத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து கிண்டி ரயில் நிலையம் வரை பயணம் செய்து வேளச்சேரியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் சுபாஷினி தனது வேலையை முடித்துக் கொண்டு மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி ரயில் நிலையம் வரை தனது கைபேசியில் கணவரிடம் பேசிக் கொண்டே ரயில்வே நடைமேடையில் நடந்து வந்தபோது அவர் பின்னால் தனது முகத்தில் பாதி அளவில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு ஒரு பெண் மேலும் ஒரு ஆண் இருவரும் சுபாஷினி பின்தொடர்ந்து வந்துள்ளார். மேலும் சுபாஷினி பின்தொடர்ந்து வந்த அந்தப் பெண் ஒரு கட்டத்திற்கு மேல் சுபாஷினியின் கையை பிடித்து பெண் காவல் உதவி ஆய்வாளர் வாகனத்தில் உள்ளார். ஒரு விசாரணை தொடர்பாக அவரை உடனே வந்து சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அப்போது சுபாஷினி நான் எதற்காக உதவி ஆய்வாளரை சந்திக்க வேண்டும் என மறுப்பு தெரிவிக்க உடனே கோபமுற்ற அந்த பெண் சுபாஷினியை வலுக்கட்டாயமாக அவர்களின் வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர். பயந்துபோன சுபாஷினி கூச்சலிட அருகில் இருந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் அந்தப் பெண் போலீசை இருந்த இடத்தை நோக்கி ஓடி வந்து பிடித்துள்ளனர். உடன் இருந்தவர் நபர் பிடிப்பட்ட உடனே அந்தப் போலி பெண் அதிகாரி அங்கிருந்து ஓட்டம் பிடித்து விடுகிறார்…
வாகனத்தில் வந்த அந்த மர்ம கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடி விடுகின்றனர். பின்னர் இதுகுறித்து சுபாஷினி கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் வியாசர்பாடியை சேர்ந்த ஜீவானந்தம் என்பது தெரியவந்தது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் பெரம்பூரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் அந்தக் கார் சென்றதும் தெரியவர பின்னர் அந்தக் கார் பதிவு எண்ணைக் கொண்டு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் வியாசர்பாடியை சேர்ந்த பாலகுரு என்பவர் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மேலும் பாலகுரு என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது போலி பெண் ஆய்வாளர் முத்துலட்சுமி போலி பெண் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் போலி பெண் காவலர் வதனி ஆகிய மூவரும் தான் என தெரியவந்துள்ளது. பின்னர் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் கிண்டி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
பேராண்மை செய்தி குழு