கொலை முயற்சி வழக்கில் | 20 வருடமாக தேடப்பட்டு வந்தவர் கைது |
கொலை முயற்சி வழக்கில் | 20 வருடமாக தேடப்பட்டு வந்தவர் கைது |
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்21 வயது முதல் தலைமறைவாக இருந்தவர் இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு 42 வயதில் போலீசில் சிக்கினார். 3 குற்றவாளிகளில் இருவர் உயிரிழந்த நிலையில் முக்கிய குற்றவாளி பிடிபட்டார். வாக்கு வாதத்தில் ஆரம்பித்த சண்டை கொலை முயற்சி வரை சென்ற விபரீதம் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 1999ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டை சிங்கார செட்டி தெருவில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் பணி புரிந்துள்ளார். அப்பொழுது அவருடன் ராமு விஜி ஆரோக்கியதாஸ் ஆகியோரும் பணி புரிந்துள்ளனர். அந்த நிலையில் கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி மெக்கானிக் ஷாப் உரிமையாளர் முருகன் என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
முருகனின் திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக மணிகண்டன், ராமு, விஜி, ஆரோக்கியதாஸ் ஆகிய 4 பேரும் எலிஸ் ரோட்டில் அமைந்திருந்த ஒரு திருமண மண்டபத்திற்கு சென்று உள்ளனர். அப்பொழுது அங்கே மணிகண்டனை கேலி செய்யும் விதமாக ராமு, விஜி, ஆரோக்கியதாஸ் ஆகிய மூவரும் கிண்டல் செய்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் ராமு, விஜி, ஆரோக்கியதாஸ், ஆகிய மூன்று பேரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்கு வாதம் முற்றி விஜி,ராமு, ஆரோக்கியதாஸ் ஆகிய 3 பேரையும் மணிகண்டன் கடுமையாக பேசியதால் ஆத்திரமடைந்த மூவரும் மணிகண்டனை கொலை செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். பின்னர் சிந்தாதரிப்பேட்டை சிங்கனி செட்டி தெருவில் திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மணிகண்டனை மூன்று பேரும் இரும்புக் கம்பி மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது மணிகண்டன் அலறும் சத்தம் கேட்டதும் அருகில் உள்ளவர்கள் வருவதைக் கண்ட மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்று ஓடி விட பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். புகாரின் பேரில் தப்பி ஓடிய மூவரையும் போலீசார் தேடி வந்தனர். அப்போது விஜி மற்றும் ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய ராமு மட்டும் தலைமறைவாக இருந்துள்ளார். பின்னர் 20 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராமுவை போலீசார் பிடிப்பதற்கு விசாரணை மேற்கொண்டனர்…
விசாரணையில் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய விஜி கடந்த 2011ம் ஆண்டு இறந்து விட்டதாகவும், அதேபோல் ஆரோக்கியதாஸ் என்பவர் 2017ம் ஆண்டு இறந்துவிட்டதாகவும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அது மட்டுமின்றி தாக்குதலுக்கு உள்ளான மணிகண்டன் 13 வருடத்திற்கு முன்பு சிந்தாதிரிப் பேட்டையில் இருந்து காலி செய்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ராமு தி.நகரில் உள்ள தலையணை செய்யும் ஒரு கடையில் பணியாற்றி வந்தது தெரியவர தகவலின் பேரில் அங்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொள்கையில் அவர் கடந்த 8 வருடத்திற்கு முன்பே அங்கிருந்து சென்று விட்டதாகவும் பின்னர் இறந்துவிட்ட ராமுவின் அண்ணனுக்கே இன்ஷூரன்ஸில் இருந்து பணம் வந்துள்ளதாக ராமுவின் உறவினர் ஒருவரிடம் போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து ராமுவின் உறவினர் அவரின் அண்ணன் குடும்பத்தில் அனைவரும் நலமா நலமாக இருப்பதாகவும் மாறாக அவர்களின் இரண்டு தம்பிகள் மட்டும் மிகவும் கஷ்டப்படுவதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் இன்சூரன்ஸ் பணம் வழங்கினால் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி, பள்ளிக்கரணை நான்காவது குறுக்கு தெருவில் ராமு தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவர அங்கு சென்ற சிந்தாதிரிப் பேட்டை போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
பேராண்மை செய்தி குழு