Fri. Dec 20th, 2024

ஆவின் நிர்வாக இயக்குனரிடம் | பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு |

புதிய ஆவின் நிர்வாக இயக்குனரிடம் | பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு |

ஆவின் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றிருக்கும் திரு.எம்.வள்ளலார் இ.ஆ.ப. அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிர்வாகிகள் சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை சந்தித்து புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்…

தங்களது கோரிக்கை மனுவை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் குழந்தைகள், வயதானவர்கள் என பொதுமக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியிலும், பால் வணிகத்திலும் தாய் வீடாக விளங்கும் ஆவின் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றிருக்கும் தங்களை எங்களது சங்கத்தின் சார்பிலும், தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான பால் முகவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சார்பிலும் தங்களை வாழ்த்தி வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். என்று கூறி தங்களது கோரிக்கைகளையும் முன் வைத்தனர்…