Fri. Dec 20th, 2024

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |

நட்சத்திர குறியீட்டில் 11வது வரக்கூடிய பூரம் நட்சத்திரம் சாய்வு நாற்காலியின் வடிவத்தை கொண்டது. நட்சத்திர அதிதேவதை ஆதித்யர்களில் ஒருவரான பாகா ஆவார் உயிர்களுக்கு பாதுகாப்பையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் தருகின்ற தெய்வமாக பாகா கருதப்படுறார். நட்சத்திர விலங்கு பெண் எலியாகவும், நட்சத்திர கணத்தில் மனுஷ கணமாகவும் விளங்குறது. நட்சத்திர மரமாக பலா மரமும், நட்சத்திர பறவையாக பெண் கழுகும் குறிக்கப்படுகிறது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலை ஆர்வம் உள்ளவர்களாகவும், கலைத் துறையில் பிரகாசிக்கும் நட்சத்திர அதிபதியான சுக்கிரன் கலைகளின் அதிபதி ஆவார், ராசி அதிபதி சூரியன் மேஷம் முதலான 12- ராசிகளில் ஐந்தாவது ராசியான சிம்ம ராசியை ஆளுகின்றார், பொதுவாக ஜாதகத்தில் ஐந்தாம் இடம் கலைகளின் வளர்ச்சி பற்றி தெரிவிக்கின்ற இடமாகும். அரசாங்க உயர் பதவிகளாக, மந்திரி பதவிகளை பற்றி தெரிவிக்கின்ற ஐந்தாம் இடத்தில் உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் அமைந்து இருப்பதால் அரசியலில் ஆர்வத்தை ஏற்படுத்தும்.பூரம் நட்சத்திரக்காரர்கள், படைப்பாற்றல் திறன் இயற்கையில் அமைந்து இருக்கும். சிறிது முயற்சி செய்தால் கூட கலைகளில் தேர்ச்சி ஏற்படும். சுப காரியங்களுக்கு ஏற்ற நட்சத்திரமான பூர நட்சத்திரத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் சஞ்சரிக்கும் காலங்களில் நல்ல பலன்களை வாரி வழங்கும் தொழில்கள் – சினிமா, பொழுது போக்கு அம்சமுடைய தொழில்கள், ஆடை அணிகலன் வியாபாரம், கலைத்துறை சார்ந்த தொழில்களில் அபிவிருத்தி ஏற்படும். பரிகாரம் – திருகுற்றாலம், திருநாவலூர், ஆகிய சிவ ஸ்தலங்களில் உங்கள் நட்சத்திர மரமான பலாமரம் ஸ்தல மரமாக இருப்பதினால் மேலே சொன்ன சிவ ஸ்தலங்களுக்கு சென்று பெருமானை வணங்கி வழிபட வளர்ச்சி உண்டு குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று வடபத்ர சயன பெருமாலோடு சூடி கொடுத்த சுடர் கொடியாம் ஆண்டாளை வணங்க அதிர்ஷ்டம் விருத்தியாகும்…

அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ் தொடர்புக்கு – 9003061806