50 ஆயிரம் ATMகளில் கொள்ளை அடித்தவர்களில் | முக்கிய நபர் கைது |
50 ஆயிரம் ATMகளில் கொள்ளை அடித்தவர்களில் | முக்கிய நபர் கைது |
நாடு முழுவதும் ஏ.டி.எம்.,ல் ஸ்கிம்மர் பொருத்தி பணத்தை கொள்ளை அடித்த கும்பல் சென்னையில் கைது செய்யப்பட்ட போது தப்பி சென்ற முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி கொல்கத்தா சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு பின்பு அவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்திய போது நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும் வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களை திருடி பண மோசடி செய்யும் கும்பல் என தெரிய வந்துள்ளது. ஸ்கிம்மர் மற்றும் ரகசிய கேமராக்கள் வைத்து வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளை அடித்திருப்பது தெரிய வந்துள்ளது.இந்த வழக்கில் பிடிப்பட்டவர்களில் பாஸ்கர் என்ற முக்கிய குற்றவாளி விசாரணையின் போது திருவல்லிக்கேணியில் இருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து திருவெல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். தனிப்படை ஒன்று மேற்கு வங்காளம் சென்று தேடுதலில் ஈடுபட்டனர். செல்போன் சிக்னல்கள் மற்றும் கைது செய்யப்பட்ட கூட்டாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நீண்ட காலமாக போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இதனையடுத்து மேற்கு வங்காளத்தில் தப்பி சென்ற பாஸ்கரை நேற்று சென்னை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். தமிழகத்தில் எத்தனை ஏடிஎம்களில் ஸ்கிம்மர் மிஷின்கள் பொருத்தி கொள்ளை அடித்துள்ளதாக என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறத
பேராண்மை செய்தி குழு