மருத்துவர்கள் சரியாக வருவதில்லை? | ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை |
மருத்துவர்கள் சரியாக வருவதில்லை? | ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை |
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தமிழக அரசு மருத்துவரை நியமித்துள்ளதா? அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் அவல நிலை?
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் யூனியன் அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு வட்டார முதன்மை ஆரம்ப சுகாதார நிலையம். இந்த முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பி அப்பகுதியில் உள்ள 25 கிராமங்களுக்கு மேல் வசிப்பவர்கள் இந்த அரசு மருத்துவமனைக்கு தான் வருகின்றனர். மாங்குனாம்பட்டி, மாஞ்சன்விடுதி, பாப்பான்பட்டி, கல்லுபள்ளம், காயாம்பட்டி, இம்னாம்பட்டி, தேத்தான்பட்டி, திருக்கட்டளை, வேப்பங்குடி, கீழப்புதூர், மேலப்புதூர், வம்பன், பூவரசக்குடி, மேலத்தோப்பு, முகாம், முகாம் தோப்புகொள்ளை, மேலக்கொள்ளை இன்னும் சில கிராமங்கள் உண்டு. அதிலும் 24 மணி நேரமும் இலவச பிரசவ சிகிச்சையும் இங்கு உண்டு. கிராம பெண்மணிகள் இந்த அரசு முதன்மை ஆரம்ப சுகாதார நிலையம் தான் போக வேண்டும். அப்படி செயல்படும் இந்த மருத்துவமனைக்கு தமிழக அரசு எத்தனை மருத்துவர்களை நியமித்துள்ளது என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கிறது. பல மருத்துவர்களை கிராமங்கள் நலன் கருதி நியமித்து இருந்தாலும் பணியில் ஏன் ஒருவர் கூட இருப்பதில்லை? என செவிலியர்கள் சிலர் குற்றம் சுமத்தி உள்ளனர். தினமும் 40க்கும் மேற்ப்பட்ட நோயாளிகள் காலை 7 மணி முதல் சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்…
பகல் 12 மணி வரை மருத்துவர்கள் யாரும் வருவதாக இல்லை என்பது தான் சிறப்பு. சிறு குழந்தை முதல் பிரசவத்துக்கு வரும் பெண்கள் மற்றும் பெரியோர்கள் வரை மயக்கமடைந்து கீழே விழுகின்ற அவலை நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் வராததால் செவிலியர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு தெரிந்த சிகிச்சையை செய்து காப்பாற்றத்தான் நினைப்பார்கள்.? மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வராமல் இருப்பதற்கு காரணம், மருத்துவர்களா? மருத்துவமனை முதல்வரா? என கேள்விகள் அடுக்கி கொண்டு செல்கிறது. பணியில் உள்ளதாக கையொப்பமிட்டு விட்டு தனது சொந்த கிளினிக் போய் விடுவது ஏன்? இப்படி பொறுப்பு இல்லாமல் செயல்படும் மருத்துவர்கள் மீது சுகாதார துறை செயலர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என புலம்புகிறார்கள் அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள்…
இந்த தகவல் கிடைத்ததும் பேராண்மை சார்பில் நாமும் மருத்துவரை நேரில் சந்தித்து சிகிச்சை பெறலாம் என தொடர்ந்து இரண்டு நாட்கள் சென்று பார்க்கும் பொழுது மருத்துவர்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டோம்…
பேராண்மை செய்தி குழு