Mon. Oct 7th, 2024

குட்கா வழக்கில் : போலீஸ் எஸ்.பி., விமலா | அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் |

பொருளாதார குற்றப்பிரிவு SP விமலா | குட்கா வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் |

தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் தமிழக முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் மற்றும் சென்னை காவல்துறையின் கூடுதல் காவல்துறை ஆணையர் தினகரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு டிசம்பர் 2ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்பட்டது.
இன்று முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அமலாக்கத் துறையில் ஆஜராகுமாறும்.. டிசம்பர் 3ம் தேதி சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது..

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குட்கா வியாபாரி மாதவராவ் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேலாக அவர் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் தமிழக அமைச்சர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு சம்பந்தம் இருப்பதாக வருமான வரித்துறையினர் அறிக்கை அளித்தனர். இதனைத் தொடர்ந்து இது குறித்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. அப்போதைய டிஜிபி டிகே.ராஜேந்திரன் முன்னாள் டிஜிபி ஜார்ஜ் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது தொடர்பாக சிபிஐ குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக இரண்டு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதே நேரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்ததை அடிப்படையாக கொண்டு அமலாக்கத் துறையினரும் குட்கா ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி விமலா சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ள நிலையில் விமலாவிடம் அமலாக்கத் துறையின் துணை இயக்குனர் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா விவகாரத்தின் போது விமலா மாதவரம் துணை ஆணையராக இருந்தது குறிப்பிடத்தக்கது…

பேராண்மை செய்தி குழு