Fri. Dec 20th, 2024

பெட்ரோல், டீசல் விலைவாசி உயரும் அபாயம்…

சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 7 காசுகளும் விற்பனை. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஏறுமுகத்தில் எரிப்பொருட்களின் விலை இருந்து வருகின்றன. இதன் காரணமாக, வாகன கட்டணங்கள் அதிகரிப்பதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது…