Fri. Dec 20th, 2024

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த | இஸ்ரோ தலைவர் சிவன் |

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த | இஸ்ரோ தலைவர் சிவன் |

இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 மற்றும் வர்த்தக ரீதியான அமெரிக்காவிற்கான 13 நானோ செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் செவ்வாய்க்கிழமை காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் காட்டோசாட் -3 வின்கலம் நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்த உள்ளது.

இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மூன்றாம் தலைமுறை நவீன செயற்கை கோள் துல்லியமாக புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. மேலும், இந்த செயற்கைகோள் பெரிய அளவிலான நகர பயன்பாட்டு திட்டம், கடற்கரையோர நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும் என்றும் தெரிவித்தார். கார்டோசாட்-3 செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். கார்டோசாட்-3 செயற்கைகோள் பூமியிலிருந்து 509 கி.மீட்டர் தொலைவில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படவுள்ளது. அதற்கான இறுதிகட்டப் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்துள்ளதாகவும் கார்டோசாட்-3 செயற்கைகோளுடன் இணைந்து வணிக ரீதியாக அமெரிக்க நாட்டிற்கு சொந்தமான (13 நானோ) வகை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்…

பேராண்மை செய்தி குழு